Home » கேளிக்கை » பீகார் சாலையில் அப்பளம் விற்ற ருத்திக் ரோசன்

பீகார் சாலையில் அப்பளம் விற்ற ருத்திக் ரோசன்

இந்தி திரைஉலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ருத்திக் ரோசன். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

👤 Saravana Rajendran24 Feb 2018 3:39 PM GMT
பீகார் சாலையில் அப்பளம் விற்ற ருத்திக் ரோசன்
Share Post

இந்நிலையில் பீகாரை சேர்ந்த பிரபல கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்கு 'சூப்பர் 30 என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் ருத்திக் ரோசன் கணித மேதை ஆனந்த் குமாராக நடிக்கிறார். இந்தப் படத்தை விகாஷ் பால் இயக்கி வருகிறார்.
இப்படத்திற்காக வித்தியாசம் தெரியாத அளவில் ருத்திக் ரோசன் படத்தின் கேரக்டராக மாறியுள்ளார். இவர் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். இந்நிலையில் இப்படத்தில் அவருடைய புதிய வேடத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தற்போது அவர் அப்படத்திற்காக சாலையில் அப்பளம் விற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.