Home » கேளிக்கை » திரையிலிருந்து உண்மை வாழ்க்கைக்கு உருமாறியிருக்கும் டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் கருவிகள்

திரையிலிருந்து உண்மை வாழ்க்கைக்கு உருமாறியிருக்கும் டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் கருவிகள்

திரைப்படங்களில் கண்டு ரசித்த டிரான்ஸ்ஃபோர்மர்சை இனி நேரிலும் பார்க்க வாய்ப்புண்டு.

👤 Saravana Rajendran27 April 2018 3:26 PM GMT
திரையிலிருந்து உண்மை வாழ்க்கைக்கு உருமாறியிருக்கும் டிரான்ஸ்ஃபோர்மர்ஸ் கருவிகள்
Share Post

இயந்திர மனிதக் கருவி போன்றிருக்கும் டிரான்ஸ்ஃபோர்மர்ஸ், திரைப்படங்களில் காராகவும் மாறுகிறது.
அதைபோன்ற ஓர் இயந்திர மனிதக் கருவியை அறிமுகம் செய்திருக்கிறது, ஜப்பானின் நிறுவனம்.
அந்த இயந்திர மனிதக் கருவி சுமார் 4 மீட்டர் உயரமானது. மணிக்கு, கிட்டத்தட்ட 100 மீட்டர் வரை நடக்கும் ஆற்றல் பெற்றது. ஒரே நிமிடத்தில் அது காராகவும் உருமாறும். அதில் பயணமும் செய்யலாம்.
அத்தகைய இயந்திர மனிதக் கருவி உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
கேளிக்கைப் பூங்காக்களிலும், சாலைகளிலும் கூட அந்த இயந்திர மனிதக் கருவிகளை விரைவில் பார்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.