Home » கேளிக்கை » இந்தியன் 2 படத்திற்கு வந்துள்ள பிரச்சினை

இந்தியன் 2 படத்திற்கு வந்துள்ள பிரச்சினை

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

👤 Sivasankaran17 April 2019 1:20 PM GMT
இந்தியன் 2 படத்திற்கு வந்துள்ள பிரச்சினை
Share Post

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். அந்த படம் நன்றாக ஓடியதால், இந்தியன் - 2 படத்தை எடுக்க இருவரும் திட்டமிட்டனர்.

இந்தியன் - 2 படிப்பிடிப்பு ஜனவரி 18ம் திகதி தொடங்கியது. இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களே நடந்தன. பின்னர் படிப்படிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.