Home » கேளிக்கை » மனம் விட்டு சிரிக்க கலகலப்பாக இருக்க கலகலப்பு 2-க்கு போகலாம்

மனம் விட்டு சிரிக்க கலகலப்பாக இருக்க கலகலப்பு 2-க்கு போகலாம்

நடிகை குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கலகலப்பு 2

👤 Saravana Rajendran10 Feb 2018 12:25 AM GMT
மனம் விட்டு சிரிக்க கலகலப்பாக இருக்க கலகலப்பு 2-க்கு போகலாம்
Share Post

நகர ஓட்டங்கள் தினசரி பணிச்சுமை, பல சிக்கல்கள் என மனச்சுமை அதிகரிக்கும் போது வாரம் ஒரு நாளாவது வாய்விட்டுச்சிரிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்தச்சுமை சிறிது இறங்கிப் போகும். தொலைகாட்சிகளில் வரும் நகைச்சுவப் பட காட்சிகளை தொடர்ந்து பார்த்து அலுத்தும் போகும் சிலருக்கும் புதிய கோணம் தேவைப்படும்.
சுந்தர் சி க்கு கோபுரத்தின் மீது என்ன பற்றோ தெரியவில்லை, கலகலப்பு1 கும்ப கோணத்தில் இருந்து கலகலப்பு 2 காசிக்குச் சென்று இருக்கிறார். நாயகனாக வரும் ஜெய், வாடகைக் குடியிறுப்பை நடத்தும் ஜீவா, போலிச்சாமியார் யோகிபாபு, சிரிப்பு இடைவெளியை எப்போதும் நிரப்பும் சிவா இவர்கள் மட்டுமல்லாது ஒரு நகைச்சுவை நடிகர் படையை வைத்து படத்தை முடித்திருக்கிறார்.
கலகலப்பு 1-ல் பார்த்த முகங்களில் பல மிஸ்ஸிங் இருப்பினும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. சிவா பாதிக்காட்சிக்கு பிறகு வந்தாலும் தன்னுடைய பங்கை முழுமையாக செலுத்தில் இருக்கிறார்.
இப்படம் சூட்டிங்கின் போது காசி சென்றிருக்கிறேன், அப்போது படம்பிடிப்பு குழுவினரிடம் இந்தக் கடுமையான கோடையில் புழுதிபறக்கும் காசியை எப்படி திரையில் கொண்டுவரவிருக்கிறீர்கள், என்று கேட்டேன். அதெல்லாம் எடிட்டிங்கில் பார்த்துக்கொள்வோம் தம்பி என்றார் காமிரா மேன்.
படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது படத்தை கலர்புல்லாக எடிட் செய்திருக்கிறார்கள். இவ்வளவு மெனகெட எதற்கு காசி செல்லவேண்டும், அதே லோக்கேசன், உஜ்ஜைன், இந்தூர், நாசிக், சாகர் போன்ற நகரங்களில் கிடைக்குமே அதுவும் இந்த அழுக்குகள் இல்லாமல் ஓரளவு நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்,
எப்படியோ படம் பார்த்த நேரம் வீண் போகவில்லை. நகைச்சுவை படங்களில் லாஜிக் பார்க்கவேண்டாம் என்று கூறி பாடான மொக்கை படம் வரிசையாக எடுக்காமல் மீண்டும் ஒரு சிரிப்புவெடியை தெரிக்கவிட்டிருக்கிறார் குஷ்பு சுந்தர் சி, அவர்களின் உழைப்பை வீனாக்காமல் பாங்காக திரையில் காட்டியிருக்கின்றனர் நடிகர் பட்டாளங்கள்.
சிரிப்பா? சிரிக்கலாம்!!, சிரிப்பு வெடிச்சிரிப்பு,

saravaNa