Home » கேளிக்கை » சமந்தாவின் சம்பளம் ரூ.3 கோடியாக உயர்த்தினார்

சமந்தாவின் சம்பளம் ரூ.3 கோடியாக உயர்த்தினார்

சமந்தா திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

👤 Sivasankaran26 July 2019 3:34 PM GMT
சமந்தாவின் சம்பளம் ரூ.3 கோடியாக உயர்த்தினார்
Share Post

பொதுவாக நடிகைகள் தாங்கள் நடித்த படம் வெற்றி பெற்றதும் சம்பளத்தை ஏற்றி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பல கதாநாயகிகளும் சம்பளத்தினை உயர்த்தி உள்ள நிலையில் சமந்தாவும் தற்போது தனது சம்பளத்தி உயர்த்தி உள்ளார். சமந்தா நடிப்பில் 'ஓ பேபி' தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் ரூ.2 கோடி வாங்கி வந்த அவர் இப்போது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.