Home » கேளிக்கை » விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்தார் பார்த்திபன்

விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்தார் பார்த்திபன்

விஜய் சேதுபதி தன்னுடைய பிறந்தநாளை ஜனவரி 16ம் திகதி கொண்டாட இருக்கிறார்.

👤 Sivasankaran14 Jan 2020 1:45 PM GMT
விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்தார் பார்த்திபன்
Share Post

தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் தன்னுடைய பிறந்தநாளை ஜனவரி 16ம் திகதி கொண்டாட இருக்கிறார். ஆனால், அவரின் ரசிகர்களோ இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே உடல் உறுப்பு தானம், ரத்த தானம் என்று கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குநருமான பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு 3 பரிசுகள் கொடுத்துள்ளார். 'நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள் 1-chess King "இன்று அன்று என்றும் King", 2-HP நிறைந்த குதிரை "ஓட்டம் தொடர..., 3-Painting of mrs mr Of V S "பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்!' என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.