Home » கேளிக்கை » மருதாணி பூசுவதிலும் உலக சாதனை. சூரத்தில் ஒரே இடத்தில் 5000 பேர் மருதாணி பூசிக்கொண்டனர்.

மருதாணி பூசுவதிலும் உலக சாதனை. சூரத்தில் ஒரே இடத்தில் 5000 பேர் மருதாணி பூசிக்கொண்டனர்.

கின்னஸ் சாதனை முயற்சிக்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரே நேரத்தில் 5000 பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி பூசிக் கொண்டனர்.

👤 Saravana Rajendran5 Feb 2018 10:03 AM GMT
மருதாணி பூசுவதிலும் உலக சாதனை. சூரத்தில் ஒரே இடத்தில் 5000 பேர் மருதாணி பூசிக்கொண்டனர்.
Share Post

இந்தியாவில் கைகளுக்கு மருதாணியிடும் வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து நடைபெறுவது வழக்கம், தென் இந்தியாவை விட வட இந்தியாவில் இந்த மருதாணியிடும் பழக்கம் மிகவும் பிரபலமானது, அனைவராலும் விரும்பப் படுவதும் ஆகும், அங்கு திருமணப் பெண் தனது திருமணத்திற்கு முதல் நாள் கைகளில் மருதாணியிட்டு தன்னை அழகுபடுத்திக் கொள்வார். தமிழர்களில் திருமணவிழாவின் ஒரு பகுதியான நலுங்கு போன்றே இந்த மருதாணி இடும் நிகழ்வு நடைபெறும் இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக மாற்ற சூரத்(குஜராத்) நகரைச் சேர்ந்த சமஸ்த் ஆகிர் சமாஜ் என்ற சமூகச் சேவை அமைப்பு ஒருங்கிணைத்தது,

இதனை அடுத்து ஞாயிறன்று சூரத் நகரில் 5000 இணையர்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பு 5000 பெண்களில், தங்களது கைகளில் மருதாணி போட விரும்பிய 2500 பெண்களுக்கு ஒருவர் மற்றவர் கைகளில் மருதாணி பூசும் வகையில் 11 நிமிடங்களுக்கு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த சாதனை, கின்னஸ் ரெக்கார்டு சாதனைக்காக வந்துள்ளதாக, கின்னஸ் சாதனை அமைப்பின் அதிகாரி அஸ்வின் சுதானி கூறி உள்ளார். இந்த சாதனையை பதிவு செய்த கின்னஸ் சாதனை அமைப்பினர் இன்னும் தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த மருதாணி பூசம் நிகழ்வு பற்றி சமாஸ்த் ஆகிர் சமாஜ் அமைப்பு சார்பில் இஜாஸ் கான் என்பவர் கூறியதாவது, நாங்கள் கடந்த 24 ஆண்டுகளாக இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சியை நடத்திவருகிறோம். இந்த நிகழ்ச்சிகள் மூலம் சமூக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்வது எங்களின் முக்கிய நோக்கமாகும் இதை நாங்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சமூக நல ஆர்வலர்களின் உதவியோடு செய்கிறோம் என்று கூறினார்.
இச்சாதனை திருமண விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.