Home » கேளிக்கை » விக்ரம் 58வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

விக்ரம் 58வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

👤 Sivasankaran16 Oct 2019 3:51 PM GMT
விக்ரம் 58வது படத்தின் கதாநாயகி  யார் தெரியுமா?
Share Post

இயக்குநர் அஜய் ஞானமுத்து, அடுத்ததாக 'விக்ரம்-58' படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

தற்போது இந்த படத்தில் கேஜிஎப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.