Home » கேளிக்கை » எலுமிச்சை பழம் ஒன்று 7600 ரூ ஏலம் போயுள்ளது.

எலுமிச்சை பழம் ஒன்று 7600 ரூ ஏலம் போயுள்ளது.

உழைக்கும் விவசாயில் தன்னுடைய திறமையை நன்கு வெளிப்படுத்தி விளைச்சல் நன்றாக வரும் என்பது உண்மையான நம்பிக்கை, ஆனால் 1 ரூபாய் க்கு கூட மதிப்பில்லாத காய்ந்த எலுமிச்சம் பழத்தை 7600 ரூபாய்க்கு வாங்குவது என்பது மடத்தனமான நம்பிக்கை தானே?

👤 Saravana Rajendran18 Feb 2018 6:08 AM GMT
எலுமிச்சை பழம் ஒன்று 7600 ரூ ஏலம் போயுள்ளது.
Share Post

சிவராத்தில் அன்று பழந்தின்னி கருப்பண்ணன் என்ற கோவிலில் இருந்த எலுமிச்சம் பழம் ஒன்று ஏலத்திற்கு வந்தது, அந்தப் பழத்தை சண்முகம் என்ற ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர் 7600 ரூ ஏலம் எடுத்துள்ளார்.
சிவகிரியில் இருக்கும் பழந்திண்ணி கருப்பன்னன் கோவிலிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டது. சிவராத்தில் முடிந்த பிறகு கோவிலை சுத்தம் செய்ய கோவிலுக்கு கொடுத்த பொருட்களை ஏலம் விடுவார்கள்,
தாம்பூல தட்டு தொடங்கி, தேங்காய், வாழைப்பழம், காய்ந்த மாலைகள் என எல்லாம் ஏலம் போய் இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இந்த பொருட்களை ஏலம் எடுக்க வந்துள்ளனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக எலுமிச்சை பழம் ஒன்று 7,600க்கு ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இது அங்கு பூஜைக்கு, கடவுளின் அடியில் வைத்து படைக்கப்பட்டு உள்ளது. ஓலப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்ற நபர் இதை வாங்கியுள்ளார். இந்த எலுமிச்சைக்கு நிறைய சிறப்பம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல இன்னும் சில பொருட்கள் 5000 ரூபாய் வரை ஏலம் போய் இருக்கிறது. இதை ஏலம் எடுப்பதால் வாழக்கையில் நிறைய பலன் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
அறிவியல் குப்பையில் இருந்து மின்சாரம் உரம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் வழிமுறையைக்கூறியிருக்கிறது, மூடநம்பிக்கை குப்பையில் போடும் பொருளை அதிக விலை கொடுத்த வாங்க வைத்திருக்கிறது