Home » கேளிக்கை » ரூ.1 கோடி சம்பளம் கேட்ட கேத்ரின் தெரசா

ரூ.1 கோடி சம்பளம் கேட்ட கேத்ரின் தெரசா

வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் கதாநாயகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர்.

👤 Sivasankaran31 Dec 2019 3:27 PM GMT
ரூ.1 கோடி சம்பளம் கேட்ட கேத்ரின் தெரசா
Share Post

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவை அணுகினர். ஆனால் பாலகிருஷ்ணா வயதான நடிகர் என்பதை சுட்டிகாட்டி அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் கதாநாயகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர். இறுதியாக கேத்ரின் தெரசாவை அணுகினர். அவரோ தனக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

இதை படக்குழுவினர் ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ம் திகதி தொடங்கப்பட உள்ளது.