Home » கேளிக்கை » 2019 இன்னும் சிறப்பா இருக்கும் - இனியா

2019 இன்னும் சிறப்பா இருக்கும் - இனியா

காபி என்ற சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன்.

👤 Sivasankaran16 April 2019 3:15 PM GMT
2019 இன்னும் சிறப்பா இருக்கும் - இனியா
Share Post

வாகை சூடவா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் இனியா. சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் இனியாவின் வேடம் பலரால் பாராட்டி பேசப்பட்டது.

தமிழ் மட்டும் அல்லாமல், மலையாளம், கன்னடம் என்று மும்மொழிகளில் இனியா நடித்துக் கொண்டிருக்கிறார்.

காபி என்ற சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது.

மலையாளத்தில் "தாக்கோல்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட "துரோணா" என்ற படத்துல நடிச்சிட்டிருக்கேன்.

தமிழில் தான் ஒரு சின்ன இடைவெளி விழுந்திருச்சி. அது காபி படத்தின் மூலம் சரியாயிடும். 2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்தது... 2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா.