Home » கேளிக்கை » 5 நிமிடம் நடிக்க சமந்தா வாங்கிய லட்சங்கள்

5 நிமிடம் நடிக்க சமந்தா வாங்கிய லட்சங்கள்

பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மார்க்கெட் சரிவது வழக்கம்.

👤 Sivasankaran4 Jun 2019 4:16 PM GMT
5 நிமிடம் நடிக்க சமந்தா வாங்கிய லட்சங்கள்
Share Post

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. இரும்புத்திரை, சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம் ஆகிய படங்களில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். கணவர் நாகசைதன்யாவுடன் நடித்து கடந்த மாதம் திரைக்கு வந்த மஜிலி படமும் வசூல் குவித்தது.

நாகார்ஜுனா, ரகுல்பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் 'மன்மதடு-2' தெலுங்கு படத்தில் கவுரவ தோற்றத்தில் வருகிறார். 5 நிமிடம் மட்டுமே இந்த காட்சி இடம் பெறுகிறது. இதில் நடிக்க சமந்தா ரூ.35 லட்சம் சம்பளம் வாங்கியதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி வருகிறது.

பொதுவாக திருமணத்துக்கு பிறகு நடிகைகள் மார்க்கெட் சரிவது வழக்கம். ஆனால் சமந்தாவுக்கு அது மாறாக ஏற்றமாகவே உள்ளது. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி கேட்கிறார் என்கின்றனர். அந்த தொகையை கொடுத்தும் தயாரிப்பாளர்கள் அவரை ஒப்பந்தம் செய்கின்றனர்.