Home » கேளிக்கை » சாமிக்கு சுடிதார் அணிவித்த அர்ச்சகர்கள் நீக்கம்

சாமிக்கு சுடிதார் அணிவித்த அர்ச்சகர்கள் நீக்கம்

தமிழ் நாட்டில் உள்ள மாயூரநாதர் கோவில் உள்ள அம்மன் சிலைக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டதாக எழுந்த...

👤 Saravana Rajendran5 Feb 2018 11:38 AM GMT
சாமிக்கு சுடிதார் அணிவித்த அர்ச்சகர்கள் நீக்கம்
Share Post

தமிழ் நாட்டில் உள்ள மாயூரநாதர் கோவில் உள்ள அம்மன் சிலைக்கு சுடிதார் அலங்காரம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் 2 அர்ச்சகர்களை நீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நிர்வாகம் செய்து வருகிறார்கள். இக்கோவிலில் நாள்தோறும் பூசைகள் நடைபெற்றுவருகிறது.
ஒவ்வொருநாளும் அர்ச்சகர்கள் மாறி மாறி பூஜை செய்து வருகின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு வந்த ராஜ என்ற அர்ச்சகர் அபாயம்பிகை சன்னதிக்கு 6 கால பூஜையை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி தைவெள்ளி விஷேசமானது என்பதால் அன்றைய பூஜையை ராஜ் அர்ச்சகர் செய்திருந்தார்.
அம்மனுக்கு சுடிதார் மாலையில் நடைபெற்ற சந்தன அலங்காரத்திற்கு திடீரென்று சுடிதார் அணிவித்து பூஜை செய்தார். இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கர்ப்ப கிரகத்தில் உள்ள இந்த சுயம்பு அபயாம்பிகை சிலையை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோலத்தை கண்ட ஒருசிலர் தங்களது செல்போனில், படம் எடுத்துள்ளனர்.
அந்த போட்டோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும் அம்மனுக்கு சுடிதார் அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த அர்ச்சகர் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு அர்ச்சகரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆகம விதகளுக்கு மாறாக அம்மனுக்கு ஆடை அலங்காரம் செய்ததாக கூறி திருவாவடுதுறை ஆதினம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.