Home » கேளிக்கை » அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு

அபுதாபி லாட்டரியில் ரூ.17 கோடி ஜாக்பாட் அடித்த இந்தியர்: நண்பர்களுக்கு பிரித்துக் கொடுக்க முடிவு

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் ரூ.17.5 கோடி பரிசை இந்தியாவைச் சேர்ந்த சுனில் மப்பட்டா...

👤 Saravana Rajendran6 Feb 2018 5:49 PM GMT
Share Post

அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் ரூ.17.5 கோடி பரிசை இந்தியாவைச் சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் வென்றுள்ளார்.
அபுதாபி லாட்டரியில் வெல்லப்பட்ட 2-வது மிகப்பெரிய பரிசு இதுவாகும்.
கடந்த மாதம் 7-ம் தேதி நடந்த லாட்டரி குலுக்கலில் கேரளாவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் வி நாயர் ரூ.21 கோடி பரிசு வென்ற நிலையில், இப்போது மற்றொரு கேரள மாநிலத்தவர் இந்தப் பரிசை வென்றுள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் திருமணமாகி அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
இந்திய மதிப்பின்படி, அபுதாபி லாட்டரியின் விலை ரூ. 8,750 (500திர்ஹாம்). இதை சுனில் மப்பட்டாவால் வாங்க முடியவில்லை. தனது நண்பர்கள் அளித்த பணத்தின் மூலம் இந்த லாட்டரியை சுனில் நேற்று வாங்கியுள்ளார்.
சுனில் வாங்கிய 'தி பிக் டென் சீரிஸ் 188' லாட்டரிக்கு முதல் பரிசான 1 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.17.50 கோடி) கிடைத்துள்ளது.
சுனிலுக்கு இந்த லாட்டரி வாங்க உதவிய தனது நண்பர்களுக்கு இந்தப் பரிசை பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, சுனில் தனது நண்பர்களான தீப்தாஸ், அபிலாஷ், சைனுதீந், சம்சுதீன் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்க உள்ளார்.