Home » உலகச் செய்திகள் » கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்

நாம் வெளித்தோற்றத்தில் மற்றவர்களைப் போல் இருக்கவேண்டும், அல்லது மற்றவர்களுக்காக நமது கலாச்சாரம் பாரம்பரியத்தை வெறுத்து பகட்டு வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் நமது கலாச்சாரமும் உலகின் உன்னதமான ஒன்று என்பதை நாம் ஒருபோதும் அறிந்துகொள்வதே இல்லை.

👤 Saravana Rajendran19 Feb 2018 11:34 AM GMT
கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்
Share Post

மனிதர்கள் வாழும் காலச்சூழல் மிகவும் குறுகியது, இந்த குறுகிய காலச்சூழலில் தனிமனிதர்கள் தங்களது அடிப்படை கலாச்சாரத்தை பாதுகாக்க நமது தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு செல்லவேண்டுமே தவிர அவர்களை அடுத்தவர்களின் கலாச்சாரத்திற்கு அடிமைகளாக்கிவிட்டுச் சென்றுவிடக்கூடாது,
இன்றும் தனது கலாச்சாரத்தை பாதுகாக்கும் மனிதர்கள் உலகில் உள்ளனர்.
பசிபிக் கடல்(பாலினீசியா) நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் மேற்கு மலைத்தொடர் பகுதி பப்புவா மாகானத்தில் வாழும் நகலுமுரோ போக்லின் மற்றும் கசிப்பிக்கா மக்கள் சமூகத்தின் பிரதிநியாக கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி அய்க்கிய நாடுகள் அவையின் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதிலிருந்து நாம் ஒன்றை அறிந்து கொள்ளவேண்டும், கலாச்சாரம் என்ற பெயரில் அறிவியலுக்கு ஒவ்வாதவைகளை கடல்கடந்த நாட்டிலும் தூக்கிசுமந்துகொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல, நாம்(தமிழர்கள்) என்ற அடையாளம் நமக்கு தமிழ் தந்தது, அந்த தமிழுக்கான அடையாளங்களை எங்கு சென்றாலும் நாம் அதை மறந்துவிடாமல் நமது தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒன்று கூறவேண்டுமானால் இன்று வட இந்திய நகரங்கங்களான மும்பை, பூனே, டில்லியில் தலைமுறை தலைமுறையாக வாழும் தமிழர்கள் தங்களில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித்தராத காரணத்தால் அவர்கள் அங்குள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு ஒத்துவராமல் தனது கலாச்சாரத்தையும் இழந்து பொதுமக்கள் கூட்டத்தில் தனித்து காணப்படுகின்றனர்.