
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில். அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று துவங்கிய, இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர், வஜுபாய் வாலா உரையாற்றினார். கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை' எனக் கூறி, பா.ஜ., உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் உரையை பாதியிலேயே, முடித்து விட்டார்.
இந்நிலையில் காங். கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்;எல்.ஏ.க்கள் 5 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் என 7 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அவர்கள் மும்பை சென்றுவிட்டதாகவும், அங்கு சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களை தவிர மேலும் 11 எம்.எல்.ஏ.,க்கள், சபைக்கு வரவில்லை; கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே சபைக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.வுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது, அரசுக்கு மேலும் குழப்பத்தையும், பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.