Home » சட்டம் & அரசியல் » மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் - கமலுக்கு நெருக்கடி?

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் - கமலுக்கு நெருக்கடி?

அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran18 March 2019 5:37 PM GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் - கமலுக்கு நெருக்கடி?
Share Post

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலிலும் போட்டியிடுமென்று கமல் அறிவித்திருந்தார்.

வரும் 24ம் திகதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்த சி.கே. குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதாக கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.