Home » சட்டம் & அரசியல் » மீண்டும் அதிகாரம் பறிபோகிறது- ஒற்றுமையின்மையினால் இலங்கைத் தமிழர்களுக்கு பின்னடைவு

மீண்டும் அதிகாரம் பறிபோகிறது- ஒற்றுமையின்மையினால் இலங்கைத் தமிழர்களுக்கு பின்னடைவு

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சிறீலங்க பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று முன்னனியில் உள்ளது. தமிழர் பகுதியில் தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிப்போகிறது.

👤 Saravana Rajendran11 Feb 2018 5:58 AM GMT
மீண்டும் அதிகாரம் பறிபோகிறது- ஒற்றுமையின்மையினால் இலங்கைத் தமிழர்களுக்கு பின்னடைவு
Share Post

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிங்களர் பகுதிகளில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சிறீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. இலங்கையில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தென்னிலங்கையில் சிங்களர் பகுதிகளில் ராஜபக்சேவின் சிறீ லங்கா பொதுஜன பெரமுன 45விழுக்காடு வாக்குகளைப் பெற்று பல இடங்களில் வென்றுள்ளது. அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 30விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இருந்த போதும் தமிழர் பகுதியில் உள்ளாட்சிகளில் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தகவல்கள்
தற்போதைய நிலவரப்படி ராஜபக்சேவின் சிறீலங்கா பொதுஜன பெரமுன 7,03,117 வாக்குகளைப் பெற்று மொத்தம் 909 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி 4,69,986 வாக்குகளைப் பெற்று 459 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75, 532 வாக்குகளுடன் 169 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இந்தத் தேர்தலில் அதிபர் சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியை முறித்துக்கொண்டு ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிட்டது, மேலும் தமிழ் தேசியக் கூட்டணியும் தனித்து போட்டியிட்டது. இதனால் வாக்குகள் சிதறி ராஜபக்சே மீண்டும் அதிகாரத்தில் வரும் சூழல் உருவாகியுள்ளது.
இலங்கையில், 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் நேற்று ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவு தொடங்கியது.பல பகுதிகளிலும் மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். தமிழர் வாழும் பகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். தேர்தலின் போது மொத்தம் 65 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முப்படையை சேர்ந்த 900 வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தேர்தலில், 25 சதவீத இடங்கள் மகளிருக்காக முதல் முறையாக ஒதுக்கப்பட்டிருந்தது.