Home » சட்டம் & அரசியல் » மோசடிக்காரர்களுக்கு பாஜக தஞ்சம் அளிக்கிறது- மம்தாபானர்ஜி

மோசடிக்காரர்களுக்கு பாஜக தஞ்சம் அளிக்கிறது- மம்தாபானர்ஜி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் மோசடி நடக்கவில்லை, இதுபோல் ஏராளமான வங்கிகளில் நடந்துள்ளன, அந்த வங்கிகளின் தலைவர்களை பாஜக அரசு காப்பாற்றி வருகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

👤 Saravana Rajendran20 Feb 2018 2:58 PM GMT
மோசடிக்காரர்களுக்கு பாஜக தஞ்சம் அளிக்கிறது- மம்தாபானர்ஜி
Share Post

மேற்கு வங்கத்தில் உள்ள பரம்பூரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பஞ்சாப் வங்கி மட்டுமல்ல, இன்னும் ஏராளமான வங்கிகள் இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளன. அந்த வங்கிகளின் தலைவர்களுக்கு பாஜக அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.
அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுவது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். யார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்.நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதற்கு முன்பிருந்தே இந்த மோசடி குறித்து திட்டமிடப்பட்டு இருக்கிறது என்று கருதுகிறேன். பரோடா வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட மற்ற வங்கிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அங்குள்ள அதிகாரிகள் நியமனம் சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துள்ளது. அவர்கள் அளித்துள்ள ஆவணங்கள், சான்றிதழ்கள் அனைத்தும் நம்பகத்தன்மையற்றதாக இருக்கிறது.மக்களின் பணம் பாதுகாக்கப்படாத வரை, நான் மத்திய அரசை விடமாட்டேன்.
மக்கள் மிகக் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். ஆனால், நிதி தீர்வு மற்றும் காப்பீடு மசோதா என்ற பெயரில் அந்தப் பணத்தை அபகரிக்க மத்திய அரசு முயல்கிறது. இதை கடுமையாக எதிர்த்து நிதி அமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதி இருக்கிறேன்.திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் விலை போக மாட்டார்கள். மக்களைக் கட்டாயப்படுத்தி எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஜனநாயகத்தை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.''இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்