Home » சட்டம் & அரசியல் » பணத்தை திரும்பத் தரமுடியாது- நிரவ் மோடி

பணத்தை திரும்பத் தரமுடியாது- நிரவ் மோடி

நான் வங்கியில் பெற்ற கடன் வெறும் 5000 கோடி மட்டுமே, அதை திரும்பத் தரமுடியாது என்று நீரவ் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

👤 Saravana Rajendran21 Feb 2018 12:27 AM GMT
பணத்தை திரும்பத் தரமுடியாது- நிரவ் மோடி
Share Post

நேஷனல் வங்கி மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிரவ் மோடி
இந்தியாவின், பிரபல நகைக்கடை உரிமையாளரும், தொழிலதிபருமான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யிடம், பி.என்.பி., வங்கி புகார் அளித்தது. இதனையடுத்து, நேற்று பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளைக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நிரவ் மோடி பி.என்.பி., வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் உங்கள் வங்கியில் வாங்கிய கடன் ரூ.5,000-ம் கோடி மட்டும்தான். ஆனால், பி.என்.பி., வங்கி சி.பி.ஐ.,யிடம் தவறான புகாரை அழித்துள்ளது. இதனால், எனது வர்த்தக நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் முடங்கியுள்ளன. வங்கியின் தவறான புகாரால், கடனில் சம்பந்தப்படாத உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் பெறப்பட்ட கடன் தொகைக்கு, குறிப்பிட்ட சொத்துகளை அடைமானமாக வைத்துள்ளோம். எனது சொத்துகளின் மதிப்பு ரூ. 6,500 கோடி ஆகும். நாங்கள் வங்கியில் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தும் சக்தியுடன் இருந்தோம். ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த தவறான புகாரால், எங்கள் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், வங்கிக்குத் திரும்ப பணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். இதனால், பாதிக்கப்படுவது வங்கி தான் என்று எழுதியிருக்கிறார். மேலும், எனது தொழில் நடவடிக்கைகளில், எனது மனைவி, மாமா மற்றும் சகோதர்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், தேவையில்லாமல் அவர்கள் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில், எனது சொத்துகள் அனைத்தையும் விற்றால் கூட, பஞ்சாப் நேஷனல் வங்கி குறிப்பிட்டிருக்கும் கடன் தொகையை அடைக்க முடியாது என்று கடிதம் எழுதியுள்ளார்.