Home » சட்டம் & அரசியல் » தமிழகத்தில் செய்யும் மோடிவித்தை இங்கே செல்லாது- சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் செய்யும் மோடிவித்தை இங்கே செல்லாது- சந்திரபாபு நாயுடு

மோடி தமிழகத்தில் ரஜினி, கமல் போன்றவர்களை முன்னால் நிறுத்திக்கொண்டு பின்னால் இருந்து இயங்குவது போல் ஆந்திராவிலும் பவன்கல்யாண் போன்ற நடிகர்களை அரசியலில் இறங்கிவிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

👤 Saravana Rajendran15 March 2018 9:38 PM GMT
தமிழகத்தில் செய்யும் மோடிவித்தை இங்கே செல்லாது- சந்திரபாபு நாயுடு
Share Post

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி அமைச்சரவையில் இருந்து வெளியேறியது. கூட்டணியை முறித்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து விலகும் நிலையில் உள்ளதாக தெரிகிறது.
இடைத் தேர்தல் தோல்விகள் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களி்ல நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழகத்தில் மோடி செய்ததை ஆந்திராவில் செய்ய முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆந்திராவுக்கு உரிமைகளை தாரதா மோடி நமக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரை மாற்றியுள்ளது நாடு முழுக்க மோடிக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் மக்கள் எண்ணம் உள்ளது. உத்திர பிரதேசம் மற்றும் பீகார் தேர்தல் முடிவுகள் இதற்கு ஒரு உதாரணம் என்று கூறினார்..
பவன் கல்யாண் போன்ற நடிகர்களை கொண்டு தெலுங்கு தேசத்திற்கு பாஜக நெருக்கடி தருவதாக சந்திரபாபு நாயுடு சுட்டிக் காட்டிய அதே நேரம், தமிழகத்தில் மோடி இதைத்தான் செய்ததாக கூறியுள்ளார். இதன் மூலம், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தந்ததன் பின்னணியில் மோடி இருப்பதாக சந்திரபாபு நாயுடு மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.