Home » சட்டம் & அரசியல் » வங்காளதேசம் - நேபாளம் இடையே புதிய பேருந்து சேவை

வங்காளதேசம் - நேபாளம் இடையே புதிய பேருந்து சேவை

இந்தியாவின் அண்டைநாடான வங்காள தேசம் -- நேபாளம் இடையே சாலை போக்குவரத்தை அதிக ரிக்கும் நோக்கத்தில் வங்காள தேசம், பூட்டான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சாலைப்பகுதியை பயன்படுத்திக்கொள்ள கடந்த 2015ஆ-ம் ஆண்டு மோட்டார் வாகன ஒப்பந்தம் செய்யப்பட் டது.

👤 Saravana Rajendran25 April 2018 5:42 PM GMT
Share Post

இந்நிலையில், நேபாள நாட் டின் தலைநகரான காத்மாண் டுவை வங்காளதேசம் தலைநக ரான டாக்காவுடன் இணைக் கும் புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையின் சோதனை ஓட்டம் இன்று டாக்கா நகரில் இருந்து தொடங்கியது.
இந்தியாவின் மேற்கு வங் காளம் மாநிலத்தில் உள்ள சிலிகுரி மாவட்டம் வழியாக சுமார் 1200 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த பேருந்தில் வங்காளதேசத்தை சேர்ந்த 25 பயணிகளும், 12 இந்தியர்க ளும், நேபாளத்தை சேர்ந்த 6 பேரும் முதன்முதலாக சென்ற னர். வரும் 26-ஆம் தேதி அவர் கள் நேபாள தலைநகர் காத் மாண்டு சென்றடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.