Home » சட்டம் & அரசியல் » வாக்களிக்காதவர்களை தூக்கிக்கொண்டு வாருங்கள்-ரவுடி போல் பேசிய மாறிய எடியூரப்பா

வாக்களிக்காதவர்களை தூக்கிக்கொண்டு வாருங்கள்-ரவுடி போல் பேசிய மாறிய எடியூரப்பா

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சுமார் 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில்...

👤 Saravana Rajendran6 May 2018 3:43 PM GMT
வாக்களிக்காதவர்களை தூக்கிக்கொண்டு வாருங்கள்-ரவுடி போல் பேசிய மாறிய எடியூரப்பா
Share Post

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சுமார் 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக முன்னாள் முதல்வரும் தற்போதைய முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா பெலகாவியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கிட்டூர் தொகுதியின் வேட்பாளர் மகான்டேஷ் பசவன்தராய் தொட்டாகவுடருக்கு ஆதரவாக எடியூரப்பா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில் தற்போது யாரும் ஓய்வு எடுக்காமல் பணியாற்றுங்கள். வரும் மே 12-ஆம் தேதி யாரேனும் வாக்களிக்க வரவில்லை என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அவர்களின் வீடுகளுக்கு செல்லுங்கள். அங்கு அவர்களது கை , கால்களை கட்டி தூக்கிக் கொண்டு வந்து பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது.
இந்நிலையில் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவே வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ளதை காங்கிரஸ் சுட்டிக் காட்டி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.