Home » சட்டம் & அரசியல் » தொடர்ந்து மூடப்படும் எடி டி எம்கள்- பணத்தட்டுப்பட்டிலிருந்து மீளாத வடமாநிலங்கள்

தொடர்ந்து மூடப்படும் எடி டி எம்கள்- பணத்தட்டுப்பட்டிலிருந்து மீளாத வடமாநிலங்கள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகுப் பிறகு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட வங்கிகள் ஏடிஎம் களின்...

👤 Saravana Rajendran8 May 2018 10:26 AM GMT
தொடர்ந்து மூடப்படும் எடி டி எம்கள்- பணத்தட்டுப்பட்டிலிருந்து மீளாத வடமாநிலங்கள்
Share Post

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகுப் பிறகு ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட வங்கிகள் ஏடிஎம் களின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் ஆன 10 மாதங்களில் நூற்றுக்கணக்கான ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.
முன்பு 1,10,116 ஆக இருந்த ஏடிஎம்கள் தற்போது 1,07,630 ஆக குறைக்கப்பட்டுள்ளன. அதாவது 2486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிக ஏடிஎம்களை மூடி உள்ளது.
வங்கிக் கிளைகளுக்கு மக்கள் பணம் எடுக்க வருவதை குறைக்க ஏடிஎம் களை உபயோகப்படுத்த நிர்வாகம் வலியுறுத்தியது. அதன் பிறகு செலவு அதிகரிப்பதாகக் கூறி ஏடிஎம் களின் இலவச பரிவர்த்தனைகள் குறைக்கபட்டன. இப்போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் களில் மாதத்துக்கு 5 முறை, மற்ற வங்கி ஏடிஎம்களில் மாதத்துக்கு 3 முறைக்குமேல் எடுத்தால் பணப்பிடிப்பு செய்யப்பட்டுவருகிறது.
இவ்வளவு இருந்தும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முடியாத காரணத்தால் எடிஎம்கள் இழுத்து மூடப்பட்டு வருகிறது. இதனால் வங்கியை நோக்கி செல்லவேண்டியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணமும் நேரமும் அதிகம் செலவாகிறது. ஆனால் இது குறித்து நிதி அமைச்சகம் கூறும் போது டிஜிடல் பண பரிவர்த்தனை தொடர்பாகவே ஏடிஎம்கள் குறைக்கப்பட்டன என்று காரணம் கூறியிருக்கிறது. 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த ரொக்கத்தட்டுப்பாடு, கர்நாடகா தேர்தல் தேதி அறிவித்த பிறகு பணத்தட்டுப்பாடு மிகவும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் எடிஎம்களும் மூடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளம் தெரிவித்ததாவது, "எடிஎம் மூடப்படும் நடவடிக்கை என்பது வாடிக்கையாளர்களுக்கு மேலும் இடர் தருவது மட்டுமின்றி வங்கி ஊழியர்களுக்கும் பணியை அதிகரிக்கும் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்