அரச மரபு இருந்தாலும் மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த பக்கட்டான் ஹராப்பன் (நம்பிக்கை கூட்டணி) பாரியவெற்றியை பெற்றது, இக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய முனைவர் மகாதீர் முகமது பதவியேற்பு விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது," தங்கள் கூட்டணி நல்லதொரு அரசாங்கத்தை தரும் என்றும், தற்போது நிதி நிலை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலம் குறித்த நிர்வாகம் போன்றவை முக்கியமானவைகளாக உள்ளது என்று கூறினார். மேலும் முதலீட்டு மற்றும் வணிக நோக்கி மலேசிய வெள்ளி(ரிங்கிட்)யின் மதிப்பை குறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர் முதலீடு செய்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும் மனித உரிமைகளை மீறும் நியாயமற்ற சட்டங்கள் அகற்றப்படும் என்றும் போலியான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீதான புதிய சட்டம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் புதிய மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்