Home » சட்டம் & அரசியல் » தொடரும் பாலியல் வன்கொடுமை பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து சிக்குகின்றனர்.

தொடரும் பாலியல் வன்கொடுமை பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து சிக்குகின்றனர்.

முசாபர்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கணவர் குற்றம்சாட்டப்படுவதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் மஞ்சு வெர்மா தனது பதவி விலகியுள்ளார்.

👤 Saravana Rajendran8 Aug 2018 3:46 PM GMT
தொடரும் பாலியல் வன்கொடுமை பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து சிக்குகின்றனர்.
Share Post

பிகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பெண்களுக்கான அரசுக் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்தது. அவர்களில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு, காப்பக வளாகத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றம் தொடர்பாக, பிரஜேஷ் தாகூர் உட்பட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்களில் மாவட்ட குழந்தைகள் பாதுக்காப்பு அதிகாரி ரவிகுமார் ரௌஷன் மற்றும் பிகார் மாநில அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்ரேஷ்வர் ஆகியோர் பெயரும் இடம்பெற்றது.

அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் அந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி தனியே சென்றுவந்ததாகவும் அவருக்கும் இதில் தொடர்பு உண்டு என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனையடுத்து மஞ்சு வெர்மா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.

"தனது கணவருக்கு இக்குற்றத்தில் தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் அவரை நானே தூக்கிலிடுவேன்" என்று கூறினார் அமைச்சர் மஞ்சு வெர்மா. இந்நிலையில், இன்று தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பாஜகவினர் அக்கட்சி ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துவருகின்றனர்.

ஜம்மூகாஷ்மீர், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் என தொடர்ந்து நடந்துவந்த பாலியல்வன்கொடுமை தற்போது பிகாரிலும் துவங்கியுள்ளது. ஆனால் தனது கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து செய்துவரும் பாலியல்வன்கொடுமைகள் குறித்து மோடி மவுணம் சாதித்து வருகிறார்.