Home » சட்டம் & அரசியல் » சசிகலாவுக்கு சொகுசு வசதி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

சசிகலாவுக்கு சொகுசு வசதி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கை ரத்து செய்ய கோரிய, ஐ.பி.எஸ்., அதிகாரி சத்யநாராயண ராவ் மனு மீதான விசாரணை, அடுத்த மாதம், 13 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

👤 Sivasankaran26 Jan 2019 7:00 AM GMT
சசிகலாவுக்கு சொகுசு வசதி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு
Share Post

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கை ரத்து செய்ய கோரிய, ஐ.பி.எஸ்., அதிகாரி சத்யநாராயண ராவ் மனு மீதான விசாரணை, அடுத்த மாதம், 13 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான, சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில், இவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, அப்போதைய சிறைத்துறை, டி.ஜி.பி., சத்தியநாராயண ராவ், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. 'சிறையில், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டது உண்மை தான்' என, சமீபத்தில் நடந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விசாரணையை ரத்து செய்யக் கோரி, சத்தியநாராயண ராவ், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், இரண்டு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை, அடுத்த மாதம், 13திகதிக்கு ஒத்தி வைத்தது.