Home » சட்டம் & அரசியல் » ராணுவ பாதுகாப்புடன் டெல்லிக்கு புறப்பட்டார் கிரண்பேடி

ராணுவ பாதுகாப்புடன் டெல்லிக்கு புறப்பட்டார் கிரண்பேடி

துணைநிலை கவர்னர் கிரண்பேடி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

👤 Sivasankaran14 Feb 2019 7:13 AM GMT
ராணுவ பாதுகாப்புடன் டெல்லிக்கு புறப்பட்டார் கிரண்பேடி
Share Post

புதுச்சேரியில் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன் 2வது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் துணைநிலை கவர்னர் கிரண்பேடி, துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை உடனடியாக அமல்படுத்தும் விவகாரம் தொடர்பாக துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நேற்று (பிப்ரவரி.13) பிற்பகல் முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கவர்னர் மாளிகை முன் விடியவிடிய நடத்திய போராட்டம் 2வது நாளாக இன்றும் (பிப்ரவரி,14) தொடர்கிறது. இரவில் கவர்னர் மாளிகைக்கு வந்த டிஜிபி சுந்தரி நந்தா, பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட நாராயணசாமி மறுத்து விட்டார்.

முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தால் புதுச்சேரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு கருதி மத்திய அதிரடிப்படை மற்றும் தொழிற்பாதுகாப்பு படையினர் கவர்னர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண்பேடி, அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தி வரும் நிலையில் கிரண்பேடியின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.