Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே – மா.பா

சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே – மா.பா

சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட...

👤 Sivasankaran19 Feb 2020 3:15 PM GMT
சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே – மா.பா
Share Post

சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமே என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மத்திய அரசே மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என அவைக்கு அமைச்சர் பாண்டியராஜன் தவறான தகவலை கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், சிறிலங்காத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைபாடு என தெரிவித்தார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.