Home » சட்டம் & அரசியல் » உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட சஜித் கோரிக்கை

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட சஜித் கோரிக்கை

பொதுத்தேர்தலை விட நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பே முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

👤 Sivasankaran13 March 2020 2:26 PM GMT
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட சஜித் கோரிக்கை
Share Post

பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைவரத்தை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தைக் கூட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுத்தேர்தலை விட நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பே முக்கியமானதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தரமுல்லை, எதுல் கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார தலைமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அரசியலமைப்பில் காணப்படுகின்றது எனவும் நாட்டு மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.