
"போர்க்காலத்தில் இராணுவத்தினரை தான் கொன்றதாக குறிப்பிட்டு பெருமைப் பட்டுக் கொள்ளும் செயற்பாடு வெறுப்புக்குரியது. பொதுத்தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே கருணா போர்க் காலத்தில் அவர் 3000 ஆயிரம் இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்" என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்
"போர்க்கால சம்பவங்களை மீள மீட்டுவது இரு தரப்பிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தான் பாவம் இழைத்துள்ளேன் என்றே கருணா வருத்தப்பட வேண்டும். இவ்வாறு இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவது தவறான செயற்பாடாகும். இவர் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நீதிமன்றம் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தமாட்டோம். இவருக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது. "
"தற்போது சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். கருணா எத்தரப்பிற்கு ஆதரவாக அரசியல் செய்கின்றார் என்பது எமக்கு அநாவசியமான விடயம். விசாரணைகளை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்