முன்னாள் பிரதியமைச்சர் கருணா தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் தெரிவிப்போர், புலிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கியவர் யார் என்பதை கூற தயங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கருணாவின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்று கூறிய அவர், சிங்கள மக்களுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகள் பழைய வரலாறு தெரியாதது போன்று பேசுவது கவலைக்குரிய விடயம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.