காணாமல் போனவர்கள் மீண்டும் வரவில்லை என்றாலோ உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ, அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே அர்த்தம் என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை அலரி மாளிகையில், தமிழ் ஊடக ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது இவ்வாறு கூறியுள்ளார்.
"முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?" என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, "விடுவிக்க முடியாத குற்றவியல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பலர், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் உள்ளடங்குவதால், அவர்களை உடனடியாக பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என்று கூறினார்.
வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளித்த போது, "காணாமல் போனவர்கள் மீண்டும் வரவில்லை என்றாலோ உலகின் எந்தப் பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ, அவர்கள் மரணித்து விட்டார்கள் என்றே அர்த்தம் என்றும் தெரிவித்தார்.