Home » சட்டம் & அரசியல் » உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் நேபாளத்தில் தங்கியிருந்த மகிந்தானந்த!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் நேபாளத்தில் தங்கியிருந்த மகிந்தானந்த!

நேபாளத்தில் தங்கியிருந்தது சந்தேகத்திற்குரியது என அன்றைய அரசாங்கத்தில் கல்வியமைச்சராக கடமையாற்றிய விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்

👤 Sivasankaran4 July 2020 2:44 PM GMT
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் நேபாளத்தில் தங்கியிருந்த மகிந்தானந்த!
Share Post

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நாமலுடன் மகிந்தானந்த நேபாளத்தில் தங்கியிருந்தார் என்று விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியை காண சென்றிருந்த அன்றைய விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே , நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, உதித் லொக்குபண்டார ஆகியோர் போட்டிக்கு முதல் நாள் நேபாளத்தில் தங்கியிருந்தது சந்தேகத்திற்குரியது என அன்றைய அரசாங்கத்தில் கல்வியமைச்சராக கடமையாற்றிய விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்