Home » சட்டம் & அரசியல் » கட்டுப்பாட்டுக்குள் கந்தகாடு - நாட்டை முடக்கும் அவசியம் இல்லை!

கட்டுப்பாட்டுக்குள் கந்தகாடு - நாட்டை முடக்கும் அவசியம் இல்லை!

கந்தகாடு கொரோனா கொத்தணி முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும்...

👤 Sivasankaran13 July 2020 3:12 PM GMT
கட்டுப்பாட்டுக்குள் கந்தகாடு - நாட்டை முடக்கும் அவசியம் இல்லை!
Share Post

கந்தகாடு கொரோனா கொத்தணி முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் நாட்டை முடக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கிருந்த அனைத்து கொரோனா நோயாளர்களும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நோய் அறிகுறிகள் கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் எந்தவொரு கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு புலனாய்வு பிரிவினர் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

தற்போதைய நிலைமையின் கீழ் கந்தகாடு கொரோனா கொத்தணி முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளமையினால் நாட்டை மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை.