Home » சட்டம் & அரசியல் » தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமில்லை!

தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமில்லை!

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வையும் எம்மால் வழங்க முடியாது.

👤 Sivasankaran17 July 2020 2:31 PM GMT
தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமில்லை!
Share Post

தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வை அரசு வழங்கமாட்டாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் "தமிழர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள். சிங்களவர்களும் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, எமது புதிய ஆட்சியில் தமிழர்களுக்கெனத் தனியான அரசியல் தீர்வை எம்மால் வழங்க முடியாது.

தமிழ் மக்களோ அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ விரும்புகின்ற தீர்வையும் எம்மால் வழங்க முடியாது.

தமிழ் - முஸ்லிம் - சிங்களம் என மூவின மக்களுக்கும் உரித்தான தீர்வை மட்டுமே எம்மால் வழங்க முடியும். நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை வழங்குவோம்.

'அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வு' என்று சம்பந்தன் கேட்பது சமஷ்டி தீர்வே. இந்த சமஷ்டி தீர்வுக்கு ராஜபக்ச அரசில் இடமேயில்லை" என்றார்.