இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக, தென் சீனக் கடலுக்கு அமெரிக்கா இரண்டு விமானம் தாங்கி கப்பல்களை அனுப்பியுள்ளது என அமெரிக்க கடற்படை வெள்ளிக்கிழமை கூறியது. சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் பிராந்தியத்தில் பதட்டங்களைத் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளன.
யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் ஆகிய கப்பல்கள் ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை போட்டி மிகுந்த தென் சீனக் கடல் நீர்வழியில் நடவடிக்கைகள் மற்றும் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டனர், வெள்ளிக்கிழமை பிராந்தியத்திற்குத் திரும்பின என அமெரிக்க கடற்படை அறிக்கையில் தெரிவித்துள்ளது.