வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளின் சுகாதார வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்திய அரசாங்கம் நிதியுதவியளிக்க முன்வந்துள்ளது.
கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தலைமையிலான குழுவுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது இவ்வாறு நிதியுதவியளிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளின் பாடசாலைகளுக்கும் அபிவிருத்தி அத்தியாவசியமாகவுள்ள சிறிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் உதவியளிக்குமாறு இதன்போது கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பிரகாரமே வடக்கு, கிழக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் சுகாதார வசதிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த இந்திய அரசாங்கம் உதவியளிப்பதாக இந்தியா உறுதியளித்ததுடன், எதிர்காலத்தில் சிறிய பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் உதவியளிக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் அமைச்சரிடம் கூறியுள்ளார்.