Home » சட்டம் & அரசியல் » தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா?

தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா?

பல நூறாண்டுகளாக தங்களுக்கு அந்த உரிமை இருப்பதாக சீனா கூறுகிறது.

👤 Sivasankaran18 July 2020 2:27 PM GMT
தென் சீன கடல் சர்ச்சை: அமெரிக்கா - சீனா இடையே மேலும் மோதலை உருவாக்குகிறதா?
Share Post

மக்கள் வசிக்காத தீவுக் கூட்டங்களில், பாரசெல்ஸ் மற்றும் ஸ்பிராட்லி என்ற இரண்டு தீவுகளின் மீது உரிமை கோருவதில் சீனாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையில் சமீப காலமாக பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த எல்லையில் பெரும் பகுதி தங்களுச் சொந்தம் என்று சீனா உரிமை கோருகிறது. பல நூறாண்டுகளாக தங்களுக்கு அந்த உரிமை இருப்பதாக சீனா கூறுகிறது.

அந்தப் பகுதியில் சீனாவின் ராணுவம் அதிகரிக்கப்படுவதை நீண்ட காலமாகவே அமெரிக்கா குற்றம் கூறி வந்துள்ளது. ``கடற்பயண சுதந்திரத்தின்'' நோக்கம் பற்றிய கருத்துகளால் சீனா தொடர்ந்து கோபம் அடைந்து வருகிறது.

2018 ஆகஸ்ட் மாதத்தில், சர்ச்சைக்கு உரிய தெற்கு சீன கடல் தீவுகளுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிபிசியின் ஒரு குழு சென்றது. ``எந்த தவறான புரிதலும் ஏற்படாமல் தவிர்க்க'' வேண்டுமானால், அந்தப் பகுதியில் இருந்து ``உடனடியாக'' வெளியேற வேண்டும் என்று பைலட்களுக்கு ரேடியோ தொடர்பு மூலம் அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு, அந்தத் தீவுகள் மற்றும் சிப்பி வளம் மிகுந்த பகுதிகளில் போர் ஒத்திகைக்காக சர்ச்சைக்குரிய எல்லையில் வெடிகுண்டு சாதனங்களை சீனா இறக்கியது.

பிராந்திய விவகாரங்களில் அமெரிக்க கடற்படை தலையிடுவதாகவும், தூண்டுதல் வேலைகளில் ஈடுபடுவதாகவும் முன்னர் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.