Home » சட்டம் & அரசியல் » சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து விலகுவது இலகுவானதல்ல - ராஜபக்ச

சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து விலகுவது இலகுவானதல்ல - ராஜபக்ச

எதிர்கால தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

👤 Sivasankaran19 July 2020 2:52 PM GMT
சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து விலகுவது இலகுவானதல்ல - ராஜபக்ச
Share Post

தேசிய வளங்களை விற்பனை செய்யும் நோக்கங்களை தவிர வேறு எந்த நோக்கங்களும் கடந்த அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹியங்கனையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து விலகுவது இலகுவான காரியமல்ல. சிரமங்களுக்கு மத்தியிலும் நாட்டின் வளங்களை எதிர்கால தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.

சர்வதேச உடன்படிக்கைகள் மூலம் நாட்டுக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ள வளங்களை எதிர்கால தலைமுறையினருக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பது எனது நோக்கம். என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.