ஜேர்மனியில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களைத் தடுக்குமாறு, ஜேர்மனியின் நான்கு மாநில முதல்வர்கள் காங்கிரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
9,500 அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனியில் உள்ள தளங்களில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உறுதிப்படுத்தினார்.
பவேரியா, ஹெஸ்ஸி, பேடன்-வூர்ட்டம்பேர்க் மற்றும் ரைன்லேண்ட்-பலட்டினேட் ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் எழுதிய கடிதத்தில்,
'நட்பின் பிணைப்பைத் துண்டிக்காமல், அதை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் அமெரிக்காவின் இருப்பைப் பாதுகாக்கவும் நாங்கள் பாடுபடுவதால் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்' என எழுதியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க துருப்புக்களை ஜேர்மனி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.