ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது.
லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார்.
'பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்' என லியு சியாமிங் கூறினார்.
ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஆயுதத் தடை ஹொங்கொங்கிற்கு நீடிக்கப்படும் என்றும் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.