Home » சட்டம் & அரசியல் » சர்வதேசம் சம்பந்தனுடன் வந்தாலும் கிடைக்காது சமஷ்டி!

சர்வதேசம் சம்பந்தனுடன் வந்தாலும் கிடைக்காது சமஷ்டி!

சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

👤 Sivasankaran25 July 2020 2:58 PM GMT
சர்வதேசம் சம்பந்தனுடன் வந்தாலும் கிடைக்காது சமஷ்டி!
Share Post

இந்தியா, அமெரிக்கா என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்துக்கொண்டு சம்பந்தன் எம்மை மிரட்ட முடியாது. இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. எனவே, சம்பந்தன் விரும்பினால் அரசுடன் பேசலாம்.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற காரணத்துக்காகவே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரை எமது புதிய ஆட்சியில் பேச்சுக்கு அழைப்போம். அந்தச் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சர்வதேசத்தை அவர்கள் நம்பினால் எந்தவித நன்மையையும் அவர்களுக்கும் கிடைக்காது; தமிழ் மக்களுக்கும் கிடைக்காது" என்றார்.