சிறிலங்காவில் வர்த்தக தொடர்புகளை தக்கவைத்துக் கொள்வதற்காக சீனா கையூட்டலை வழங்குவதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்தியா, ஜப்பான் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தமது வர்த்தக இருப்புக்களுக்காக சிறிலங்கா வுக்கு கையூட்டல்களை வழங்ககுவதில்லை என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
கையூட்டல்களை பெற்றுக்கொள்வதற்காகவே ராஜபக்சர்கள் அடிக்கடி சீனாவுக்கு செல்கிறார்கள் என்றும் சுஜீவ சேனசிங்க குற்றம் சுமத்தினார்.