Home » சட்டம் & அரசியல் » சிங்கள வாக்கு வங்கியை இழக்க முடியாது - ரணில்

சிங்கள வாக்கு வங்கியை இழக்க முடியாது - ரணில்

கட்சியில் இருந்து விலகிய எவருக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது

👤 Sivasankaran31 July 2020 12:07 PM GMT
சிங்கள வாக்கு வங்கியை இழக்க முடியாது - ரணில்
Share Post

கட்சியில் இருந்து விலகிய எவருக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பான்ஸ் பிளேஸில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கொண்டிருக்கின்றோம். எமக்கு சிங்கள வாக்கு வங்கி உள்ளது. அதனை இழக்க முடியாது. முஸ்லிம் மற்றும் பறங்கி வாக்கு வங்கியும் உள்ளது. தற்போது நான் 15 முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இது 16வது முறை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.