Home » சட்டம் & அரசியல் » பசில் கொலைச் சதி என்பது தேர்தல் குண்டு! - ஒப்புக்கொண்டார் பிரதமர்

பசில் கொலைச் சதி என்பது தேர்தல் குண்டு! - ஒப்புக்கொண்டார் பிரதமர்

பசில் மீதான கொலை சதித்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

👤 Sivasankaran6 Aug 2020 1:52 PM GMT
பசில் கொலைச் சதி என்பது தேர்தல் குண்டு! - ஒப்புக்கொண்டார் பிரதமர்
Share Post

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியான தகவல் தேர்தல் குண்டு என்பதை பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்ட வேட்பாளருமான லக்ஸ்மன் யாபா அபேவர்தன அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் பசில் மீதான கொலை சதித்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, லக்ஸ்மன் யாபா மாத்தறை மாவட்டத்தில் தோல்வியடைந்து விடுவார் என்ற அச்சத்தினால் இப்படியான போலித் தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.