Home » சட்டம் & அரசியல் » மனைவி குறித்து பெருமைக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய

மனைவி குறித்து பெருமைக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய

தங்களது 40ஆவது திருமண நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றனர்.

👤 Sivasankaran6 Aug 2020 1:58 PM GMT
மனைவி குறித்து பெருமைக்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய
Share Post

எனது வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம் என் மனைவிதான் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் தங்களது 40ஆவது திருமண நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில், "40 வருடங்களுக்கு முன்னர், இதே நாளிலிருந்து அன்பான மனைவியாக, பாசமான தாயாக, நல்லதொரு நண்பியாக, என்னோடு நிழலாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நீங்களே என் வாழ்க்கையின் உண்மையானதோர் ஆசீர்வாதம்" என அவர் பதிவேற்றியுள்ளார்.