Home » சட்டம் & அரசியல் » சிறிலங்காவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதரகம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதரகம்

சிறிலங்காவைத் தாம் வாழ்த்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

👤 Sivasankaran7 Aug 2020 3:56 PM GMT
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க தூதரகம்
Share Post

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்தி நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் என்று அமெரிக்கா தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்,

சிறிலங்கா மக்கள் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, அடுத்த நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சவால்களை மீறி, அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் தேர்தல்களை நடத்தியமைக்காக சிறிலங்காவைத் தாம் வாழ்த்துவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புதிய அரசாங்கம் பொருளாதார மீட்சியைக் கட்டியெழுப்புவதற்கும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை வெளியிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.