Home » சட்டம் & அரசியல் » இன்றே பதவியேற்கிறார் பிரதமர் மஹிந்த!

இன்றே பதவியேற்கிறார் பிரதமர் மஹிந்த!

மஹிந்த இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

👤 Sivasankaran8 Aug 2020 2:57 PM GMT
இன்றே பதவியேற்கிறார் பிரதமர் மஹிந்த!
Share Post

ஒன்பதாவது பாராளுமன்றின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். களனி ரஜமஹா விகாரையில் இன்று முற்பகல் 9.00 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவை திட்டமிடப்படவுள்ளததாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்