Home » சட்டம் & அரசியல் » கோழிகள், முட்டைகளுக்கும் அமைச்சர்கள்! - ஹக்கீம் கிண்டல்

கோழிகள், முட்டைகளுக்கும் அமைச்சர்கள்! - ஹக்கீம் கிண்டல்

நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

👤 Sivasankaran13 Aug 2020 1:04 PM GMT
கோழிகள், முட்டைகளுக்கும் அமைச்சர்கள்! - ஹக்கீம் கிண்டல்
Share Post

கோழிகள், முட்டை மற்றும் கழிப்பறைகளுக்கு இப்போது அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பெரிய நகைச்சுவை என நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் நியமனத்தின்போது அமைச்சர்கள் பிரிக்கப்பட்ட விதம் குறித்து தாம் திருப்தி அடையவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.